தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு..

முல்லைத்தீவில்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17.09) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் தனியார் பேரூந்து சங்க ஊழியர் , உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்குள் முல்லைத்தீவிலிருந்து செல்லும்   தூர சேவை பேரூந்துகள் பேரூந்து நிலைசெல்வதற்கு அனுமதி கோரியும் இல்லையெனில்,

இலங்கை போக்குவரத்து சபைக்கு தனியான பேருந்து நிலையம் வேண்டும் எனவும்  ,கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச,தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதோடு  காரைநகர் கிளிநொச்சி சாலைகளுக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...