Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு ..
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
78 வயதுடைய பெண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் மகன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள்தாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.