தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக பல கோடி ரூபா ஒதுக்கீடு ….

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் எண்ணத்தில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

இன்று காலை முதல் மாலை வரை இந்த நிகழ்வுகள்  சிறப்புற இடம்பெற்றது

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகான விவசாய மீன்பிடி அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் மற்றும் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பல்வேறு திணைக்களங்கள் தொடர்பான ஆவணங்கள் பெற்றுக்கொள்ள   மக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படிருந்ததோடு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு   நடமாடும் சேவையில் பங்குபற்றியவர்களுக்கு உத்தியோக பூர்வமாக திருமண பதிவு சான்றிதல்கள் முதியோர் அட்டைகள் இறப்பு சான்றிதல்கள்  உள்ளிட்ட சில ஆவணங்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட அதிதிகளால் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இங்கு உரை நிகழ்த்திய தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,  இன்று ஒரோநாடு என்ற அடிப்படையில் நாட்டை கட்டி எழுப்ப முன்வந்துள்ளோம் இதற்கு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களின் அதிகமான வாக்குகளை பெற்ற அதிக எண்ணிக்கையிலான பாராமன்ற உறுப்பினர்களை பெற்று அதிக எண்ணிக்கையிலான மாகாணசபை உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்கட்சிதலைவர் அவர்கள் பாராமன்றில் தெளிவாக எடுத்து கூறியிருந்தார் தனி ஒரு நாடு  என்ற செயற்பாடு இனி எங்களுக்கு இல்லை ஆயுதப்போராட்டத்தை நாங்கள் அங்கிகரிக்ப்பபோதில்லை என்ற கருத்தினை சம்மந்ன் அவர்கள் பலமுறை தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் ஒரு நாடு கட்டி எழுப்ப வேண்டும் அதற்கு தேசிய நல்லிணக்கம் அல்லது ஒருமைப்பாடு என்ற பாதையினை தொட்டால் அல்லது ஜனாதிபதி வடக்கிற்கு வந்து தேசிய ஜக்கியத்தினை பற்றி பேசினால் மாத்திரம் தேசிய ஜக்கியம் வந்துவிடாதுதேசிய ஜக்கியம் மற்றும் நல்லிணக்கம் என்ற வார்த்தை சாப்பாடு போடாது  நல்லிணக்கம் தேசியம் ஒருமைப்பாடு ,வரவேண்டும் என்றால் சமத்துவம் அனைத்திலும் வரவேண்டும் சமத்துவம் ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையில் ஒருபோதும் சமத்துவம் இல்லை எனவே ஜக்கியம் வராது.

எங்கெங்கு குறைகள் இருக்கின்றனவே குறைகளை கண்டுபிடித்து குறைகள் நிறைகளாக வரும்போதுதான் சமத்துவம் வருகின்றது அதனால்தான் எங்கெங்கு குறைகள் இருக்கின்றனவோ எனது அமைச்சு பொறுப்பாக கொண்டு தேடி ஓடி அலைகின்றேன். அதனால் நாடோடியாக திருகின்றேன்.

இங்குள்ள மக்களுக்கு கழிவறை இல்லை வீடு இல்லை என்றார் செல்லம் அடைக்கலநாதன் அதே கருத்தினை ஒட்டி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் அவர்களும் தெரிவித்தார் வீடு கட்டுவது என்பது பாரிய பணி எனது அமைச்சிற்கு சில மாதங்களின் முன்னால்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகள் வீடுகள் வீடு கட்டவில்லை என்பதன் காரணத்திற்காக அரசாங்கத்தின் பாங்காளி என்றவகையில் நான் கூட்டுபொறுப்பினை   ஏற்றுக்கொள்கின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளும் எனது பொறுப்பில் வீடுகட்டும் பொறுப்பில் இருக்கவில்லை கடந்த இரண்டு மாதங்களாகத்தான் வந்தது அதனால்தான் வீடு கட்டும் என்ற கருத்து நாடுமுழுவதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.

நாடாளுமன்றம் மேடைகள் எல்லா இடமும் பேசுவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள் ஆனால் நான்  அந்த பொறுப்பினை எடுத்தபிறகுதான் அந்த கருத்து வடகிழக்கு உள்ளிட்ட நாடு முழுக்க தொடர்ச்சியாக பேசப்பட்டு விவாதிக்கப்டப்டு வந்துள்ளது.

நான் வீடுகட்ட தயார் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சின் செயலாளர் உள்ளி;ட்ட அதிகாரிகளுடன் இணைந்து விடுபட்ட இடத்தில் இருந்து செயற்பட தயாராகி இருக்கின்றேன்.

ஆனால் இன்று என்னை பார்த்து வீடுகட்டி தாருங்கள் என்று சொல்லும் செல்வம் அடைக்கலாநான் ,சிவனேசன், அவர்கள் தங்கள் தலைவர் சம்மந்தன் அவர்களிடம் சென்று கேட்கவேண்டும் நீங்களம் பாரானமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களும் சேர்ந்து கடிதமூலம் ஒரு கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஅவர்களிடம் வைத்தீர்களா என்று கேட்கவேண்டும்

அவர்கள் வைத்த கோரிக்கையினை பிரதமர் அவர்கள் என்னிடம் கோரியுள்ளார்

இந்த வீடுகட்டும் பொறுப்பினை மனோகணேசன் அவர்களிடம் பறித்து எடுத்து பழைய அமைச்சர் மூன்று ஆண்டுகள் வீடு கட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனிடம் வழங்குங்கள் என்று சொல்லின்னீங்கள் என்று கேழுங்கள் அதனை கேட்கவிரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் வீடுகட்டவில்லை பொருத்துவீடு பொருந்தாத வீடு என்று சொல்லி தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவரும் பேச்சாளரும் ஏனைய சில பாராளமன்ற உறுப்பினர்களும் கரைச்சு கொட்டினார்கள் குறை சொன்னார்கள் குற்றம் சொன்னார்கள்

இப்போது பார்த்தால் நான் வீடுகட்ட வருகின்றேன் நான் தயாராக இருக்கின்றேன் இங்கு வாழும் மக்கள் எனது உறவுகள் கடந்த காலங்களில் கட்டப்படாத வீடுகளை தேடி கண்டுபிடித்து விட்ட இடத்தில் தொடர்ந்து செய்ய முன்வரும் மனோகணேசனை வீடுகட்ட வேண்டாம் சுவாமிநாதனிடம் வீடுகளை கட்ட கொடுங்கள் என்று சொல்வார்களேயானால் என்ன முரண்பாடு இது  இந்த முரண்பாட்டிற்கு செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் சிவனேசன் அவர்களும்தான் பதில் சொல்ல வேண்டும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்னால் உங்கள் தலைவர் அவர்களிடமும் பேச்சாளரிடமும் கேள்விகளை கேழுங்கள்

மக்கள் கைதட்டுகின்றார்கள் பலமாக கைதட்டுங்கள் மக்கள் குரல் இது மக்கள் ஒலிஇது இதுதான் உண்மை ஏற்கனவே இந்த மாவட்டத்திற்கு ஆறுகோடி ரூபா ஒதுக்கியுள்ளேன்  இன்று என்னிடம் தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கின்றது கூட்டமைப்பின் கட்சிசார்ந்த சிலர் மனோகணேசன் ஏன் வடக்கிற்கு வருகின்றார் கிழக்கிற்கு வருகின்றார் வரவேண்டாம் என்று கூட சொல்கின்றார்கள்

தமிழரசு கட்சியினை சார்ந்த ஒருவர் அவர் பொதுச்செயலாளர் என்று சொல்கின்றார் அவரை பார்த்ததே கிடையாது அவர் என்னை பார்திருப்பார் அவர்கள் சென்னதை படித்தேன் மனேகணேசன் ஏன் வடக்கு கிழக்கிற்கு வருகின்றார் வரவேண்டாம் என்று சொன்னார்

நான் ஒரு அமைச்சர் எவரின் அனுமதியும் எனக்கு தேவையில்லை இந்த நாட்டின் எந்த இடத்திலும் நான் வருவேன் மக்களுக்கு நன்மைசெய்யத்தான் நான் வருகின்றேன்

இந்த அரசாங்கத்தில் இருந்து  வளப்பங்கீட்டினை பெற்றுக்கொள்ளும் முழுமையான உரிமை உங்களுக்கும் இருக்கின்றது ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ்தேசிய கட்சி மத்திய வட்டத்தில் இருக்கின்றமையால் அறுதி தீர்வு வரும்வரைக்கும் காத்திருக்கின்ற காரணத்தல் பொருளாதார தீர்வு வரவில்லை.

முஸ்லீம் மக்களை பாருங்கள் அவர்கள் அரசியல்வாதிகளை பாருங்கள் அரசினை உருவாக்கி வைத்துவிட்டு வெளியில் இருந்து வேடிக்கை பார்க்காமல் அதன் உள்ளே போய் வளப்பங்கீட்டினை மேலும் மேலும் அள்ளி எடுத்து அவர்கள் மக்களுக்கு கொடுக்கின்றார்கள்.

ஆனால் நம்மால் செய்யமுடியவில்லை அதனை எப்படி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதில் கூட்டமைப்புத்தான் முடிவு எடுக்கவேண்டும் இந்த குறைபாடுகளுக்கு காரணம் கொழும்பிலும் இருக்கின்றது.

நாட்டில் வடக்கு கிழக்கிலும் இருக்கின்றது அதனை நீங்கள் இங்கே திருத்துங்கள் கொழும்பில் இருப்பவர்களை நான் திருத்திக்கொண்டுதான் இருக்கின்றேன் என்றும் மனோகணேசன்   தெரிவித்துள்ளார்.

Comments
Loading...