தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த யானை ஒன்று உயிரிழப்பு: யானையின் உடம்பில் இருந்து சன்னம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  கரிப்பட்ட முறிப்பு கற்கிடங்கு அம்மன் ஆலயத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகுடப்படட பல பகுதிகளில்  மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்த காட்டு யானை ஒன்றே இவ்வாறு  உயிரிழந்துள்ளது.

யானையின் கால் பகுதியில் காயமடைந்த நிலையில் நடமாட முடியாது குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக குறித்த யானை நடமாடியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

யானை இறந்ததை தொடர்ந்து தகவல் வழங்கப்படட நிலையில் குறித்த இடத்துக்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர் இதன்போது காலில் கடடுத்துவக்கு சன்னம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவப்பரிசோதனையை தொடர்ந்து யானை அடக்கம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்

Comments
Loading...