Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் மீனவர்கள் கைது…
முல்லைத்தீவு கொக்குளாய் கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 06 கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளார்கள்.
கொக்குளாய் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் படகு ஒன்றில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை மீவனர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மினவர்கள் குருநாகல் பகுதியினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் படகினையும் கடற்படையினர் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில்நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.
பொலிஸார் மீனவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது