தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் அடிதடி!

முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக முஸ்லீம் குடியேற்றமாக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை நீராவிபிட்டி பகுதியில் இரு முஸ்லீம் கட்சிகளது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் நடந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் 8 பேரை முள்ளியவளை காவல்துறையினர்; கைது செய்துள்ளனர்.
அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்கள் சிலர் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரது வீட்டுக்கு சென்று சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு நிலையில் மோதல் முற்றியுள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த முள்ளியவளை காவல்துறையினர் 8பேரை கைது செய்துள்ளனர். இதில் காயமடைந்த சிலர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களால் இன்றையதினம் இலங்கை அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானிக்க பட்டிருந்தது . அமைச்சர் ரிசாத் நீராவிபிட்டி கிராமத்துக்கு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திட்டமிட்டு தடுப்பதாக் தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யபட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கை அமைச்சர் ரிசாத்தினால் பெருமளவிலான ஆதரவாளர்கள் முன்னைய அரசின் காலப்பகுதியில் காணி பிடித்து குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...