தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் 36 வது மாதிரிக்கிராமத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு ..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட  மூங்கிலாறு கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான  36 வது மாதிரிக்கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (23)  இடம்பெற்ற்றுள்ளது   

 குறித்த பகுதி கிராம அலுவலர் தலைமையில்   இந்நிகழ்வு இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. 

நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் வடமாகான சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் ,

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் விஜித கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்

நிகழ்வில் வீட்டுபயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...