தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் 60 அடி உயர தாதுகோபத்துடன் கூடிய விகாரை அமைக்க அனுமதி…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 அடி உயர தாதுகோபத்துடன் கூடிய விகாரையொன்றும்,   பிக்குகளுக்கான விடுதியொன்றையும் அமைப்பதற்கு  முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை  நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

குறித்த  அனுமதியை தொல்பொருள் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்;.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின், செல்வபுரம் மாதிரி வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் வெளிப்படுத்தியுள்ளார்.

 கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, தமிழர்களின் பூர்வீகக் காணிகள், தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்ச்சிகள் நடைபெற்று வந்ததையும் இதன்போது  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை  பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

தற்பொழுது  யாழ்  மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...