தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு புனித அந்தோனியார் கடற்தொழில் சங்கத்தனை சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை 20.02.19 மேற்கொண்டுள்ளார்கள்.

அண்மையில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாக தெரிவித்து கோப்பபுலவு மீனவர்களின் தொழில் இடத்திற்கு சென்றபோது கடற்தொழில் அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இதன்போது கைகலப்பாக மாறியுள்ள நிலையில் அங்கு தடைசெய்யப்பட்ட வலைகளையோ படகினையோ நந்திக்கடலில் பயன்படுத்த முடியாது என கடற்தொழில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்லையில் இந்த மக்கள் பதிவிற்கு உட்படுத்தமுடியாத வெட்டுவள்ளத்தினை பாவித்துள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். இந்லையில் கேப்பாபுலவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க கோரியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்ளத்தினால் எந்த உதவிகளும் வழங்காத நிலையில் சமூர்த்தி நிவாரணம் கூடஇல்லாத நிலையில் தாங்கள் எங்க செல்வது பரம்பரை பரம்பரையாக கடற்தொழிலினையே நம்பி வாழ்ந்துவந்துள்ளதாகவும் தங்களுக்கு பெருங்கடலில் தொழில் செய்வதற்கான அனுமதி மற்றம் படகு உதவிகளை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியிடம் அவர்கள் குறித்த கோரிக்கையடங்கிய மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.

Comments
Loading...