Designed by Iniyas LTD
முல்லைத்தீவு குமுளமுனையில் விகாரை அமைப்பதை தடுத்த தமிழ் இளைஞர்கள் கைது…
முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்புபிரதேசங்களுக்கிடையில் நிர்மாணிக்கப்படவுள்ள விகாரை பணிகளை தடுத்து நிறுத்தியதாக இரு இளைஞர்கள் கைதாகியுள்ளதாக தெரியவருகின்றது
விகாரை அமைப்பு பணிகளை தடுத்ததன் மூலம் இனநல்லிணக்கத்தை பாதிக்க செய்ததாக ஜக்கிய தேசியக்கட்சியின் உள்ளுர் பிரமுகரான கலைச்செல்வன் என்பவர் முல்லைதீவு பொலிஸ்நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
இதன் அடிப்படையிலேயே குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கைதான இளைஞர்கள் இருவரும் நேற்றிரவு நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.