தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச பண்பாட்டு விழா …

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச பண்பாட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது!

 துணுக்காய் பிரதேசத்தின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் ஊர்தி பவனியுடன் மங்கள வாத்தியத்துடன் கோலாட்டம்,சிலம்பம்,குதிரையாட்டத்துடன் முதன்மை விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 பிரதேச செயலக மநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபதி கோதீஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராகவும்,  மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

பண்பாட்டு விழாவில் வரவேற்பு நடனத்தினை மல்லாவி கலாநர்த்தனாலய மாணவர்கள் வழங்க தொடர்ந்து கோட்டைகட்டிய குளம் மாணவர்களின் கிராமிய நடனம்,கரகாட்டம்,

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்கள் தலைமையிலான கவி அரங்கம்,தமிழ்த்தாய் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதாடிய மைந்தன் சிந்து நடைக்கூத்து வில்லுப்பாட்டு மாணவர்களின் தனி நடனம் குழு நடனம் என்பன இடம்பெற்றுள்ளது.

சிறப்பாக துணுக்காய் பிரதேச செயலகத்தின் மருதோவியகம் என்ற நூலினை பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி வெளியீட்டுவைக்க மாவட்ட அரசாங்கஅதிபர் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பிரதேசத்தினை சேர்ந்த முதுபெரும் கலைஞர்களுக்கு கலைத்திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...