தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு பகுதிக்கு ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் விஜயம்

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் சகீட் முல்லைத்தீவில் தமிழர் மரபுரிமை பேரவையினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் செம்மலை நிராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாக உறுப்பினர்கள், மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது இன, மத ரீதியாக தமிழ் மக்களுக்கு யுத்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அநீதிகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது இன,மத ரீதியாக தமிழ் மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பட்டுள்ள பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் ஊடக அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Loading...