Designed by Iniyas LTD
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்தகாலத்தில் போரினால் பதிக்கப்பட்ட 303 பேருக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் ஹதர் மஸ்தான் அவர்களும் மாவட்ட செயலாளர் ரூபவதி கோதீஸ்வரன் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் தலைவர் திரு அன்னலிங்கம் மற்றும் கணக்காளர் திரு.பதுறுதீன் ஜக்கியதேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் றிசாம்ஜெமால்டின் மற்றும் பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள்
22மில்லியன் ரூபா பெறுமதியான காசோமலைகள் 303 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இது இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வாக காணப்படுகின்றது மீள்குடியேற்ற அமைச்சின் இந்த செயல்திட்டமானது கிடப்பில் கிடந்த பல பைல்கள் மீளஎடுக்கப்பட்டு அதற்கான கொடுப்பனவு வழங்கு கின்ற ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதில் 246 பொதுமக்களுக்கும் 46அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இறந்த அல்லது காயமடைந்த 7பேருக்கும் 4சமயதலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் 1866 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது 1055காயம் அடைந்தவர்களுக்கும் 2474 பொதுமக்களுக்கும் 1820 அரச உத்தியோகத்தர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த இழப்பீட்டு கொடுப்பனவுக்கான கோவைகள் அதிகம் காணப்படுகின்றது இன்னும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவைகள் மாவட்டத்தில் இருக்கின்றது என்றும் தெரிவித்த அவர்.
முன்னர் நூறு அல்லது ஜம்பது நட்டஈட்டுகளைதான் ஓர் ஆண்டில் கொடுக்ககூடியதாக இருந்தது ஆனால் தற்போது இந்த ஆண்டு அதிகளவான நட்டஈட்டு கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டுள்ளது இது மக்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது புனர்வாழ்வு அபிவிருத்தி அதிகாரசபைக்கும் மீள்குடியேற்ற அமைச்சிற்கும் நன்றி கூறகடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்



