Designed by Iniyas LTD
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதியோர் நாள் நிகழ்வுகள். …
முல்லைத்தீவில், மாவட்ட அளவிலான முதியோர் நாள் நிகழ்வுகள், சமூகசேவைத் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது
இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார். முதியோர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு முதியவர்கள் தமக்கு சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பிரச்சினை தொடர்பிலும் பேசினர்.
மேலும் முல்லைத்தீவு சமூக மேம்பாட்டு அமைப்பினரால் முதியோருக்கு சிறிய அளவிலான உதவிகளும் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் திரு.கலிற்றன் – சாம் அவர்களின் தலைமையிலும், சமூக மேம்பாட்டு நிறுவன உறுப்பினர் திரு.கிருசுணபிள்ளை – தவராசா அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இந் நிகழ்வில்,
முதியோர்கள் பலர் பாட்டுப்பாடி, கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து என்பவற்றை நடித்தும் தமது கலைப் புலமைகளை வெளிப்படுத்தினர்.
அத்துடன் முதியவர்கள் தாம், பேருந்து பயணங்களிலும், வைத்தியாலை போன்ற பொது இடங்களிலும் எதிர் நோக்கும் இடர்பாடுகள்,பிரச்சினைகளையும், மாதாந்த உதவிப் பணம் பலருக்கு கிடைப்பதில்லை என்ற குறைகளையும் முன்வைத்தனர்.
நிகழ்வில் விருந்தினர்களாக, வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.நடராசா – தசரதன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முதியவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



