தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைப் பெரியாறு விவகாரம்: அணைக்கு தொழிலக படை பாதுகாப்பு தேவையில்லை – மத்திய அரசு பதில்

mullaperiyar-damமுல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், அணையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பணியமர்த்த தேவையில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள அரசு கோரினால் அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments
Loading...