Designed by Iniyas LTD
முல்லையில் அகழ்வின்போது துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி என்பன மீட்பு…


முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில் இன்று நீதிமன்ற அனுமதியுடன் நீதியாளர் எஸ்.லெனின்குமார்,சட்டவைத்திய அதிகாரி, மற்றும் பொலிஸார் முன்னிலையில் அகழ்வுப் பணி இடம்பெற்றது.
இதன்போது மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இலக்கதகட்டில் த.வி.பு புலனாய்வுப் பிரிவின் ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்ட்ட உடலத்தின் எச்சங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழி ஒன்று தோண்டப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வுபணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது