Designed by Iniyas LTD
முல்லையில் அடைமழை காரணமாக குளங்கள் உடைப்பு….
கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அடை மழை மற்றும் காட்டுவெள்ளம் காரணமாக எட்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதன் காரணமாக 247 குடும்பங்களை சேர்ந்த 759 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நித்தகை குளம் உடைப்பெடுத்ததன் காரணத்தால் மக்கள் 06 பேர் நிர்கதிக்குள்ளாகியுள்ளதாகவும், அவர்களை முப்படையினரையும் இணைந்து மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இனிவரும் காலங்களில் அனர்த்தம் ஏற்படக்கூடியசூழல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் விழிப்பாக இருந்து கிராம அலுவலகர்களுக்கு தெரியப்படுத்துவதுடன்,
அனர்த்த முகாமைத்துவநிலையத்திற்கும் தெரியப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.