Designed by Iniyas LTD
முல்லையில் பாம்பு கடித்து ஒருவர் பலி!
இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
5 பிள்ளைகளின் தந்தையான எ.ஒஷ்தியாம்பிள்ளை (வயது-64) என்ற ஓய்வுபெற்ற தபால் ஊழியரே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பிரஸ்தாப நபர் அதிகாலை எழுந்து வீட்டின் பின்புறமாக சென்ற வேளை பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அவர் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தள்ளது.சடலமானது பிரதே பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
