Designed by Iniyas LTD
முல்லையில் மணல் ஏற்றும் டிப்பருக்குள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 25 தேக்க மரக் குற்றிகள் பறிமுதல்..
முல்லைத்தீவு, முறிப்பில் மணல் ஏற்றும் டிப்பருக்குள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 25 தேக்க மரக் குற்றிகள் நேற்றையதினம் சிறப்புக் குற்றத்தடுப்பு, போதை ஒழிப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையிலான குழுவே மரக்குற்றிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
டிப்பரை மறித்துச் சோதனையிட்டபோது தேக்கம் மரக் குற்றிகள் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை யாழ்ப்பாணத்துக்குக் கடத்திச் செல்லப்படவிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் மரக்குற்றிகள் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.