தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் 48வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 48 நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மாதர் சங்கங்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றன .

இதேவேளை காணாமல்ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 

Comments
Loading...