தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை, மன்னாரில் மீன் பிடி விவசாயத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் இருக்கக்கூடாது-சிவமோகன்

யாழ்ப்பான குடாநாட்டு பகுதியில் நெருக்கமாக மீன் பிடியில் ஈடுபடுவதால் கொரோனா தொற்று ஏற்படும்  வாய்ப்புள்ளதாகவும் இதனால் யாழ்பாணத்தில் மீன்பிடித் தொழிலை தடைசெய்யவேண்டும் என்று யாழ்நகர முதல்வர் ஆனோலட்  அவர்கள் வடக்குமாகான ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார் இது தொடர்பாக வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆனோல்ட் அவர்கள் தெரிவித்த கருத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரச்சனை யாழ்ப்பாண பிரச்சனையை வடமாகாண பிரச்சனையாக கருதி அரசாங்கம் முல்லைத்தீவு மன்னார் பகுதியிலும் உள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்க கூடும் முல்லைத்தீவு மன்னார் மாவட்டத்து மக்கள் கடற்தொழிலையும் விவசாயத்தையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்கள்  இவர்களின் வாழ்வாதார தொழிலுக்கு எந்த ஒரு இடையூறுகளும் அரசு ஏற்படுத்தக் கூடாது.


முல்லைத்தீவு கடற்கரை மிக நீண்டது இங்கே நெருகடியாக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை அவர்கள் பாரிய இடைவெளியில் தான் மீன் பிடி தொழிலை செய்து வருகிறார்கள்.அதே போல் தான் மன்னார் மாவட்ட கடற்பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த மீன்பிடிகள் மூலமாக  பல்லாயிரக் கணக்கான மக்களில் உணவுத் தேவைகளும் வாழ்வாதாரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.


முல்லைத்தீவு மன்னார் மாவட்டத்து மக்களின் மீன் பிடி விவசாயத்தில்  அரச நிர்வாகம் எந்த ஒரு இடையூறுகளும் செய்யாமல் இருக்க வேண்டும்  என்பது என்னுடைய வேண்டு கோள்  மக்கள்  வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள மீன் பிடி விவசாயம் போன்ற தொழில்கள் முடக்கப்பட கூடாது.


ஆனால் தனி நபர் சுகாதார முறைகளையும் சுகாதார தினைக்களத்தின் கொரோனா தொடர்பான விழிப்புனர்வுகளையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் ஒன்றாக கூடி  தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியே அவர்களது தொழிலை செய்ய வேண்டும் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

Comments
Loading...