தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை மாவட்டத்தில் 45 கிராம அலுவலர் வெற்றிடங்கள்!

mullaiமுல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த ஏனைய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 127 கிராம அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 82 கிராம அலுவலர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் 127 கிராம அலுவலர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 82 கிராம அலுவலர்கள் கடமையாற்றுவதுடன் 45 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கரைதுரைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் 31 கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் 15 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
27 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் ஒன்பது கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம அலுவலர்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன.

19 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 12 கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் 07 கிராம அலுவலர் பிரிவுகள் வெற்றிடமாக காணப்படுகின்றன.

15 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் ஏழு கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் எட்டுக் கிராம அலுவலர்பிரிவுகள் வெற்றிடமாக காணப்படுகின்றன.

20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 13 கிராம அலுவலர்கள் கடமையாற்றுவதுடன் ஏழு கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு 127 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த ஏனைய ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் தற்போது 127 கிராம அலுவலர்கள் கடமையாற்ற வண்டிய நிலையில் தற்போது 82 கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் 45 கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் வெற்றிடமாகவுள்ள கிராமவலர் பிரிவுகளுக்கு குறித்த பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் உள்ள கிராம அலுவலர்களே பதில்கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...