Designed by Iniyas LTD
முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் மக்கள் போராட்டம்!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டச் செயலகத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் மயானம் ஒன்றிற்கான மதில் அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சைக் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பிரதிநிதியை உடன் விடுதலை செய்யுமாறுக்கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.