தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை மீனவர்களால் சிங்கள மீனவர்கள் விரட்டியடிப்பு!

Srilankan-fishermen-group34முல்லைத்தீவு கடலில் தென்னிலங்கை மீனவர்கள் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்போவதில்லையென்ற மீன்பிடி அமைச்சரது உறுதி மொழியை அடுத்து மாத்தளன் சாலையடியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் உள்ளுர் மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை, முல்லைத்தீவு மீனவர்கள் ஒன்றிணைந்து கடலில் வைத்து துரத்தியடித்தனர். இதனால் கரையோரப்பகுதியில் பதற்ற நிலை நீண்ட நேரமாக நிலவியிருந்தது.
தென்னிலங்கையினை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மீனவர்கள் மீன்பிடி அமைச்சின் அனுமதியை பெற்று இக்கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அண்மையில் முல்லைதீவு வருகை தந்த ஸ்ரீலங்காவின் மீன்பிடி அமைச்சரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர்களிற்கு தடை விதிப்பதுடன் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையினில் உள்ளுர் மீனவர்கள் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

Comments
Loading...