Designed by Iniyas LTD
முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்கிறது!
ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டு இன்று தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால், இடம்பெயர்ந்த 350 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தின் முருங்கன்,வாழ்க்கைபெற்றான்கண்டல், தாழ்வுபாடு, பேசாலை, வங்காலை உள்ளிட்ட பல இடங்களில் புலம்பெயர்ந்தனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள மலங்காடு என்னும் காட்டு பிரதேசத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் குடியமர்ந்தனர்.
அத்துடன், பல குடும்பங்கள் மோதலின்போது பாதுகாப்புப் காரணங்களுக்காக தமிழகத்திற்கு
துப்பரவுசெய்து 176 குடும்பங்கள் அனுமதியின்றி குடியமர்ந்தனர்.

இந்த நிலையில், மலங்காடு பிரதேசத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் காயாக்குழி என்னும் இடத்தில் 92 குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.
எனினும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குறித்த காணியை விடுவிக்குமாறு மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அரசாங்கத்துடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் இன்றுவரை காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமது வாழ்வாதாரங்களுடன், தமது கிராமத்தை முழுமையாக அபகரித்துள்ள ஸ்ரீலங்கா கடற்படையினரை தமது கிராமத்தை விட்டு வெளியேறுமாறு முள்ளிக்குளம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சண்முகம் தவசீலன்