Designed by Iniyas LTD
முள்ளியவளையிலும் சுவரொட்டிகள்….
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் என்ற அமைப்பின் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சுவரொட்டிகளில், நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து, இப்போது தான் நாம் ஓரளவு நிம்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம்.
அதனை குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன.
மேலும் இப்படியான விசமிகளை, நாம் இனங்கண்டு தண்டனை வழங்கவேண்டும் எனவும் குறித்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


