தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளியவளை பிரசேத்தில் செங்குந்தா வீதி சந்தியில் வாள்வெட்டில் காயமடைந்த மூவர் மாவட்ட மருத்துவ மனையில்…

முல்லைத்தீவு முள்ளியவளை பிரசேத்தில்  செங்குந்தா வீதி சந்தியில் நேற்று முன்தினம் 13.05.19 இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் காயமடைந்த மூவர் மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் முள்ளியவளை பகுதியில்
நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளை வீதியில் நின்ற இளைஞர்கள் சிலரை பத்துப்பேர் கொண்ட வாள்வெட்டுக்கும்பல் ஒன்று மறித்து வாளால் வெட்டியுள்ளது .

இதில் இருவர் கடுமமையாயான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


முள்ளியவளை 03ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 26 அகவையுடைய தா.கரிகாலன்,22 அகவையுடைய றா.மதுசன் ஆகியோர் வாள்வெட்டுக்காயங்களுக்கும் கேப்பாபுலவினை சேர்ந்த 29 அகவையுடைய சி.தவேந்திரன் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுக்குழுவினால் இவர்களின் உந்துருளி ஒன்றும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கையில் கடுமையான வெட்டுக்காயத்திற்கு உள்ளான றா.மதுசன் என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைக்கா யாழ் பொது மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Comments
Loading...