தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்காலில் மீண்டும் தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் படையினர்

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்  புலிகளால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம்களில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.

இந் நிலையில், நேற்று மாலையும் அவ்வாறான தேடுதல் பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த  தகவலுக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனிஸ்குமார் முன்னிலையில் இந்த தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேடுதல்  பணிகள் இதுவரை நிறைவடையாத நிலையில், நாளைய தினத்திற்கு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...