தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைக்க முற்பட்ட அருட்தந்தை எழில் ஸ்ரீ புலனாய்வாளர்களால் கைது!

முள்ளிவாய்க்கால்  இனவழிப்பு நாளினை  முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி ஒன்றினை அமைப்பதற்கு  அருட் தந்தை எழில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை யாவரும் அறிந்ததே.  அதில்  முதல் கட்டமாக 500 பேரின் விபரத்தினை திரட்டி  நினைவு தூபி அமைக்க ஒழுங்கு படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று காலை முல்லைத்தீவிலுள்ள  ஸ்ரீ புலனாய்வாளர்கள் விசாரணைக்கு வருமாறு
அழைத்துள்ளனர்.ஆனால் அங்கு வரமுடியாதெனவும் தான் கொழும்பு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவதாகவும்  கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஸ்ரீ புலனாய்வுத்துறையினர் அவரை வலுகட்டாயமாக முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் இழுத்துச் சென்றுள்ள்ளனர்.
ஆனால் இன்று மாலை வரை அருட்தந்தை  விடுவிக்கப்படவில்லை.அவரது நிலைமை தொடர்பில் எமது செய்தியாளர் கேட்டபோது  புலனாய்வுத்துறையினர் கூற மறுத்துவிட்டனர்ள்ள. நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும்   மைத்திரி அரசு தற்போது தனது இனவாத முகத்தினை காட்டத்தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...