தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

முள்ளிவாய்க் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாகவும்,

தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று யாழ் கைதடியில்  அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த அமர்வின்போது , சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசதிரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கோரிக்கை

தமிழர்களின் இனஅழிப்பு தினமான மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் அவர்  வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கையினை சபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்ய  தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக  அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...