தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தாண்டி ஆர்ப்பரித்து எழவேண்டும் -எம் கே சிவாஜிலிங்கம்..

எமது இனத்திற்கு நீதியும் நியாயமும் அதேபோல அரசியல் விடுதலையும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்வதற்காக, அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தாண்டி ஆர்ப்பரித்து மக்கள் எழுவதைப் பார்த்து சர்வதேசமும் இலங்கை அரசும் இதற்கான முடிவை வெகு சீக்கிரத்தில் கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தை   நாங்கள் வலியுறுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம் என வடமாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு  கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வடமாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இலங்கையின் அரச ஆயுதப் படைகளால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு கொடூரமாக போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாளில் இருந்து 10 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து மே பதினெட்டாம் நாள் பத்தாவது ஆண்டு நினைவு நாளாக இந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.

இந்த சூழ்நிலையிலே தமிழின படுகொலை நினைவு வாரத்தை மே 12 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கின் மாகாணங்களில் எட்டு மாவட்டங்களிலும் அனுஷ்டிப்பதற்கு   ஏற்பாடு செய்து இன்றைய தினம் முதலாவது நிகழ்வாக நண்பகல் 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரமாக சேதமாக்கப்பட்டு புதையுண்டு இருக்கக்கூடிய கப்பலுக்கு அருகிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூரமாக துடிதுடித்து இறக்க கொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த இந்த  இனப் படுகொலையின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு அந்த வீரவணக்க நிகழ்வு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி உட்பட நான்கு நிகழ்ச்சிகள் வள்ளிபுனம் கிளிநொச்சி வவுனியா அதேபோல நாளைய தினம் மன்னார் நகரம் உயிலங்குளம் முழங்காவில் யாழ்ப்பாண மாநகர முற்றவெளி  மைதானம் நாளை மறுதினம் 14ஆம் திகதி செம்மணி  சாவகச்சேரி சந்தைப் பகுதி அதேபோல மிருசுவில்  வட்டுக்கோட்டை சுன்னாகம் சுழிபுரத்தில் இருக்கக்கூடிய அந்த தமிழீழ  தீர்மானம் எடுக்கப்பட்டு இன்றைக்கு 43 ஆண்டுகள்  1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அந்த தீர்மானம் எடுக்கப்பட்ட இடத்துக்கு முன்னாலே பிற்பகல் 3 மணிக்கும்  அதேபோல 157 பேர் விமான குண்டு வீச்சினால் மிக மோசமாக அகதி மக்கள் மானிப்பாய் புனித சென் பீற்றஸ்  தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த போது 157 பேர் படுகொலை செய்யப்பட்டு 400 பேருக்கு மேற்பட்டோர் படுகாயப்படுத்தப்படட அந்த இடத்திலே அஞ்சலி நிகழ்வும்,

அடுத்த நாள் குமுதினி படகு புறப்பட்டு வந்த போது அதில் பயணித்த பெண்கள்குழந்தைகள் ஆண்கள்  சிறுவர்கள் என்று வகை தொகையின்றி   கடற்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட அந்த மே 15 ம் திகதி  1985  ஆம் ஆண்டில் இடம்பெற்றது இப்பொழுது  34 வது ஆண்டு  நினைவு தினமாக அனுஸ்ரிக்கப்பட  இருக்கின்றது.

ஒரு வயது பெண் குழந்தை உட்பட அதிலே வெட்டி படுகொலை செய்யப்பட்ட அந்த கோர நிகழ்வினுடைய  நினைவு நிகழ்வுகள்  15 தேதி காலை 9 மணிக்கு நெடுந்தீவிலே நடைபெறும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் அல்லைப்பிட்டியில் மிகப் பெரிய அளவிலேயே படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட தேவாலயத்துக்கு அருகிலே  அஞ்சலி நிகழ்வுகல்  இடம்பெறும்.

மாலை 5 மணிக்கு பருத்தித்துறை  கடற்கரையிலே நிகழ்வுகள் இடம்பெறும் மாலை 7 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி பொலிகண்டி பகுதியில் செம்மீன் படிப்பகத்திலே  50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நூலகத்திற்குள் அடைத்து  வைத்து வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்து துண்டு துண்டாக இளைஞர்களுடைய அவையங்கள் சிதற  செய்யப்பட்ட மே  9 ம் திகதி 1985 ம் ஆண்டு அதனுடைய 34 வது ஆண்டு பூர்த்தியாகியிருக்கிறது அந்த நிகழ்வும் அன்றைய தினம் பிற்பகல் 7 மணிக்கு நடைபெறும்.

16 ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு திருகோணமலை மாவட்டம் சம்பூரிலே  நிகழ்வுகல்  இடம்பெறும் மாலை ஐந்தரை மணிக்கு திருகோணமலை கடற்கரையோரமாக இருக்கக்கூடிய வெலிக்கடை தியாகிகள்  நினைவரங்கத்திலும்  5 பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்படட அந்த இடத்திலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்.

17 ம் திகதி காலை 10 மணிக்கு  அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கடற்கரையோரமாக அந்த முருகன் கோவிலுக்கு எதிரிலே  நினைவு நிகழ்வு இடம்பெறும் மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி கடற்கரைஇலே  நிகழ்வு இடம்பெறும்.

18ஆம் திகதி காலை 9 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகப் பிரமாண்டமான அளவில் இடம்பெறும் அந்த  தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் நாம் கலந்து கொள்வோம்.

இங்குள்ள மதகுருமார்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து மதகுருமார்கள் உட்ப்பட  சிவில் அமைப்புக்கள் இணைந்து அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள் நாங்கள் எல்லோரும் கட்சி பேதங்களை கடந்து  குறிப்பாக தமிழ் தேசிய உணர்வாளர்கள் என்ற வகையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை என்னுடை இதற்கு அனுசரணை வழங்குகிறது.

ஆகவே இந்த ஆண்டு வடக்கு மாகாணசபையின்  பொது மக்கள் ஆட்சி இல்லாத காரணத்தினால் பொதுமக்களுடைய அமைப்பு இதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே மக்கள் அச்சமின்றி பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகதான்  ஒரு வாரத்துக்கு முன்பாகவே  இந்த நினைவு வார்த்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

இது முதலாவது நிகழ்வு 8 மாவட்டங்களிலும் 21 நிகழ்வுகள் ஆறு நாட்களில் இடம்பெறும்

தமிழ் இனப்படுகொலை  தினம் மே 18 ஆம் திகதியம் இதேபோல  தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் மே 12 இல் இருந்து 18 வரை அனுஷ்டிப்பதற்காக முக்கிய  காரணங்கள்.

கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது  பிரச்சினைக்கு விசாரணை செய்யப்பட்டு ஒரு முடிவு சொல்லப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளின் உடைய பிரச்சினைக்கு முடிவு வேண்டும் .

பயங்கரவாதத் தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.   எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய கிராமங்கள் காணிகள் தனிப்படட காணிகள் ஆகியவற்றிலிருந்து முப்படையினரும் வெளியேற வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தும் சர்வதேசத்தை நோக்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை பிரச்சினை இந்த போர்குற்றங்கள் இனப்படுகொலைக்கான விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அதே போன்று தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தான் இந்த தினத்தை நாங்கள்  அனுஷ்டிக்கின்றோம்.

இந்த கொல்லப்பட்ட அத்தனை மக்களுக்கும் எங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்தி எங்களுடைய இனத்திற்கு நீதியும் நியாயமும் அதேபோல அரசியல் விடுதலையும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்வதற்காக இதை ஆண்டுதோறும் நாங்கள் நினைவு கூற வேண்டும் என்ற அடிப்படையில், இதை நினைவு கூறுவதற்கு எந்த வித தயக்கமும் இல்லாது அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தாண்டி ஆர்ப்பரித்து மக்கள் எழுவதைப் பார்த்து சர்வதேசமும் இலங்கை அரசும் இதற்கான முடிவை வெகு சீக்கிரத்தில் கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தை   நாங்கள் வலியுறுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்  என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...