Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்கால் மண்ணில் பெருந்திரளாக மக்கள் அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்றுடன் 8 வருடங்கள் ஆகின்றன. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த எமது தமிழ் உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது தமிழ் மக்கள் துடிதுடித்து மடிந்த இடத்தில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ் நிகழ்வில் பெருந்திரளாக மக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளார்.


