தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முஸ்லிம் அகதிகள் குடும்பத்தை வட்டிக்கான் அழைத்து சென்ற போப்ஆண்டவர்

கிரீஸ் நாட்டில் லெஸ்பாஸ் தீவில் உள்ள மொரியா முகாமில் 3 ஆயிரம் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அங்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் (79) வருகை தந்தார்.Migrant-crisis-Pope

அகதிகளை சந்தித்து பேசினார்.  அப்போது அங்கிருந்த அகதிகள் அவரது காலில் விழுந்து வணங்கி கண்ணீர் விட்டு அழுதனர். தங்களை காப்பாற்றும்படி கதறினர்.  அப்போது, அவர்களிடம் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் “நீங்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. நாம் அனைவரும் குடிபெயர்ந்து வந்த அகதிகள்தான். நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்” என ஆறுதலுடன் பேசினார்.  மேலும், அந்த முகாமில் தங்கியிருந்த 3 சிரியா முஸ்லிம் அகதிகள் குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தஞ்சம் அளித்தார்.

அவர்களில் 6 பேர் குழந்தைகள். குண்டு வீச்சில் இவர்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதியானார்கள்.  பின்னர் அவர்கள் அனைவரையும் ரோம் நகரில் உள்ள வாடிகனுக்கு தன்னுடன் விமானத்தில் அழைத்து வந்தார். முன்னதாக லெஸ்பாஸ் முகாமில் அகதி ஒருவர் போப் ஆண்டவர் காலில் விழுந்து கண்ணீருடன் ஆசி பெற்றார். ஒரு பெண் பாதுகாப்பு வளையத்தை மீறி போப் ஆண்டவரை கண்ணீருடன் சந்தித்தார். அவரது பரிதாப நிலையை பார்த்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்ணீர் வடித்தார்.

Comments
Loading...