தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மூங்கிலாறு வடக்கில் கசிப்பு காச்சிய மூவர் புதுக்குடியிருப்பு பொலீசாரல் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காச்சி வருவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தகவலையடுத்து,

இதனை அடுத்து நேற்றையதினம்  புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது பாரியளவில் கசிப்பு காச்சிவந்த இடத்தனை சுற்றிவளைத்து அதில் இருந்த மூவரை கைதுசெய்துள்ளார்கள்.

இதன்போது 25 லீற்றர் கசிப்பு மற்றும் மூன்று பெரல் கேடா என்பன பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை காச்சும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த மூவரையும் கைதுசெய்துள்ளார்கள்

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Comments
Loading...