தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய கும்பல் – யாழில் சம்பவம்…

யாழ் உடுவில் பகுதியில்  தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவரை கும்பல் ஒன்று  வீடு புகுந்து கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பலே மூதாட்டியைத் தாக்கியுள்ளதாகவும்    தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  மூதாட்டிக்கு   காலை  உணவு வழங்க சென்ற மகள் , உடனடியாக  அவரை அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்  அனுமத்த நிலையில்,

மேலதிக சிகிச்சைக்காக குறித்த மூதாட்டி  யாழ்  போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்படுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Comments
Loading...