Designed by Iniyas LTD
மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து நடை பயணம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணமானது, தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணத்துடன் யாழ்பாணத்தை நோக்கி சென்றடையும்.
அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றது நிகழ்வு ஏற்பாட்டுகுழுவினர்.