Designed by Iniyas LTD
மூன்று நாட்களாகத் தொடர்கிறது சம்பூரில் சாகும்வரை உண்ணாவிரதம்!
சம்பூர் கிளிவெட்டி நலன்புரி முகாமில் உள்ள மக்கள் சொந்த இடத்தில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மீள்குடியேற்றுவது குறித்து புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சுமார் 10 வருடங்களாக அடிப்படைவசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் அவலத்துடன் வாழும் தம்மை தமது சொந்த இடமான சம்பூரில் மீளக் குடியமர்த்துமாறு வலியுறுத்தி கிளிவெட்டி நலன்புரி முகாமில் உள்ள மக்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் சம்பூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.



