Designed by Iniyas LTD
இனந்தெரியாதோரால் மூவர் சுட்டுக்கொலை!
வெல்லம்பிட்டிய 20 வீட்டுத்திட்ட பகுதியில் மூவர், நேற்று நள்ளிரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
19, 24 மற்றும் 49 வயதுடைய மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.