தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்!

Jallikattu_Protest-EPSஇளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டபிறகும் மெரினாவில் கலைந்து செல்லாமல் மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். காவல்துறையின் அராஜக செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்முறையை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் திங்கள்கிழமை மாலை முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைத்ததை அடுத்து போராட்டத்தை திங்கள்கிழமை மாலை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து,  இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்த மீனவர்கள், மெரீனாவில் 300 பேருடன் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments
Loading...