தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெர்சலுடன் மோதப்போகும் படங்கள் எவை தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது, இந்த படத்திற்காக தளபதி ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மெர்சல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதால் மற்றைய படங்கள் அமைதியாக விலகி கொண்டன, ஆனால் தற்போது இரண்டு படங்கள் தீபாவளிக்கு மெர்சலுடன் மோத உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள ஹர ஹர மகாதேவகி என்ற படமும் அர்ஜுன் இயக்கத்தில் அவருடைய மகள் ஐஸ்வர்யா நடிக்கவுள்ள சொல்லி விடவா என்ற படமும் தான்.
மெர்சலுடன் மோதும் இந்தப் படங்களின் நிலை என்னவாகும் மெர்சலைப் பார்த்து மிரளுமா? அல்லது மிரட்டுமா? என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

Comments
Loading...