தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மேய்ச்சல் தரை அபகரிப்பு

மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியமர்ந்துள்ளவர்கள் அங்கு தனி ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அங்கு கால்நடைகள் சுடப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மேய்ச்சல் தரைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தற்போது எவருக்கும் கட்டுத்துப்பாக்கிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதன் பின்னணி என்ன என்பதைப் பொறுப்பானவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேய்ச்சல் தரை

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பில் 250, 000 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளாக்கப்படுகின்றன. மட்டக்களப்பில் போர் முடிவுற்றதன் பின் பெரும்பாலான மேய்ச்சல் தரை காணிகள் அத்துமீறி அபகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் எமது கால்நடை வளர்ப்பாளர்கள் அதிகம் பாதிப்புறுகின்றனர் என்றார்.

Comments
Loading...