Designed by Iniyas LTD
மேற்குலகத்தின் நலனுக்காகவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது – கஜேந்திரன்..
இந்தியா மற்றும் மேற்குலகத்தின் நலனுக்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இத்தகவலை த.தே.மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு ரணில் தரப்பினர் எந்தவொரு நன்மையையும் செய்யாத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த உத்தரவாதத்துக்கு இணங்க ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.