தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைக்கல் கிளார்க் ஒருநாள் கிரிகட் போட்டியில் இருந்து ஓய்வு

உலகக்கிண்ண இறுதிப்போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.clarck

உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

நாளைய போட்டியே அவருக்கு கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் வெற்றியுடன் அவரை வழி அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

33 வயதான மைக்கேல் கிளார்க் கடந்த 2003ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். இதுவரை 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 7907 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Comments
Loading...