Designed by Iniyas LTD
மைத்திரிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!
வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்களென வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனால் இதுவரை காணி விடுவிப்பில் முழுமையான முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. அதுமாத்திரமின்றி அரசியல் தீர்வு குறித்த அரசியலமைப்பிலும் முன்னேற்றம் இல்லை.
இவ்வாறாக தீர்வின்றி தொடர்ந்துவரும் தமிழர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படாவிடின், தமிழ் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவர். நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லிணக்கம் மீது உண்மையான கரிசனை காணப்படின் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையினில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் வருகை தந்த வேளை கே.சிவாஜிலிங்கம் தலைமையினில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே.