Designed by Iniyas LTD
மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகக் குறிப்பொன்று கூறுகிறது.
அமைதியான வகையில் ஜனநாயக வழிமுறையில் தேர்தலில் பங்குபெற்றதற்காக இலங்கை மக்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா, இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டை நாடு என்று கூறிய மோடி, இலங்கையில் சமாதானம், வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தர உறுதியளித்தார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.