Designed by Iniyas LTD
மைத்திரியின் புனைகதை!
வலி வடக்கு மக்களை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாய் அகதியாக்கியது சிங்கள அரசு. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்த ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரி சில காணிகளை விடுவித்ததுடன் கட்டி முடித்த சில வீடுகளையும் கையளித்தார்.
இதன்போது தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சொல்லக்கூடாது என்று மாவை சேனாதிராஜா மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையாக முன்வைத்தார்.
சிங்கள தேசம் திரும்பிய மைத்திரியின் முகப்புத்தகத்தில் “எல்.ரி.ரியினரின் பயங்கரவாத நடவடிக்கைகளால் அகதிகளாக்கப்பட்ட மக்கள்…” என விழித்து புனைகதை எழுதப்பட்டுள்ளது.
சிங்கள இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு போரால் மக்கள் அகதிகளாக்கப்பட்டதுடன் அவர்களின் காணி நிலங்களை சிங்கள அரசு கால் நூற்றாண்டாய் ஆக்கிரமித்து வைத்திருந்தது.
//எல் ரி ரி ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி…// வலி வடக்கு மக்களை துரத்தி அவர்களின் நிலங்களை விழுங்கி, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாய் அந்த மக்களை அகதியாக்கி அலைந்தழியச் செய்த சிங்கள அரசு எழுதிய புனை கதையே இது.
சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை மறைக்க வரலாற்றுப் பொய் சொல்கிறது அரசு. நீதியற்ற, உண்மையற்ற ஒரு இன ஒடுக்குமுறைக் கொடுங்கோல் அரசு எதைவேண்டுமாலும் சொல்லும்.
தமிழர்களை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்பதற்கும் சிங்கள அரசு செய்த இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்கும் இச் செயல் நல்ல எடுத்துக்காட்டு.
