Designed by Iniyas LTD
மோடியின் கோவை வருகை – 22 அமைப்புக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட 22 அமைப்புகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
டெல்லியில் இருந்து கோழிக்கோட்டில் நடைபெறும் ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்ற பின்னர், தனி விமானம் மூலம் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகிறார். முதலில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். பின்னர், பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதி தமிழர் கட்சி உள்ளிட்ட 22 அமைப்புகள் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தலித்துக்கு எதிரான செயல்பாடுகளில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 180க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.