தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடியின் பயணத்தில் பல பொய்கள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்நாட்டில் முதற்தடவையாக நடாத்தப்படும் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இங்கு வருகை தந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும், சர்வதேச வெசாக் தின வைபவங்களில் கலந்து கொண்டதும் முக்கிய விடயங்களாகும்.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு எதிர்ப்புக்கள் தோன்றியதாக அறிய முடிந்தது.

இந்தியாவில் இந்து தீவிரவாத கட்சியைச் சேர்ந்த மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக் கூடாது என்றே எதிர்ப்புக்கள் எழுந்தன.இந்நாட்டு பௌத்தர்கள் இந்துக்களுக்கு தொல்லைகளை வழங்குவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டு பௌத்தர்களின் பிரதான வைபவத்தில் கலந்து கொள்வது தொடர்பில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் இவ்வாறான எதிர்ப்புக்களை துளியளவும் கணக்கில் எடுக்காது இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையின் சில தீவிரவாத குழுக்களும் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிலர் மோடி வரும் தினத்தில் கறுப்பு கொடிகளை பறக்க விட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மோடி வருவது சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களுக்கு என்பதால் அத்தினத்தில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

பௌத்த சமூகத்தின் முக்கியஸ்தர்களுள் அனேகமானோர் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும் தீவிரவாத சிறு குழுக்கள் அவ்வாறான விடயத்தைச் செய்வதற்கு முயற்சித்தன.இதனால் நாடும் மக்களும் அபகீர்த்திக்கு உள்ளானாலும் அரசாங்கத்தை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே இவ்வாறான தீவிரவாதக் குழுக்களின் தேவையாக உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

அவர்களின் நோக்கம் எவ்வாறிருந்தாலும் பௌத்தர்களின் புனித தினத்தினை அசுத்தப்படுத்துவதற்கும் கூட அவர்கள் இதன் மூலம் முயற்சிப்பதைக் காண முடிகின்றது.

அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் அனைத்து அயல் நாடுகளுடனும் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணித்த ஒரு தலைவராகவே இந்திய பிரதமர் மோடி காணப்படுகின்றார்.

இந்தியாவினுள்ளேயே எழுந்த எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது அவர் தனது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வலயத்தின் அனைத்து அரச தலைவர்களுக்கு அழைப்பை விடுத்ததும் தனது நல்லெண்ணத்தைக் வெளிக்காட்டுவதற்கேயாகும்.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

தன்னுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததோடு புதுடில்லியில் மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.இந்த வரவேற்பு அயல் நாடான இலங்கையின் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டதே தவிர மஹிந்த ராஜபக்ச என்ற அரசியல்வாதிக்காக வழங்கப்பட்டதல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

அன்றும் மோடியின் தேவையாக இருந்தது இலங்கை மக்களோடு நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயமேயாகும்.

இந்திய பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் கடந்த வருடம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்தப் பயணத்தின் போது இந்நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் வகையில் அவர் ஸ்ரீமகாபோதியில் வழிபாட்டில் கலந்து கொண்டார்.

அதாவது அவருக்கு ஏதேனும் ஒன்று தேவை என்பதாகும். அது வேறொன்றுமல்ல. இந்நாட்டு மக்களின் நல்லுற வேயாகும். இந்தச் செய்தி இலங்கையர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் நரேந்திர மோடி தெற்காசியாவுக்கே பரிசொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டார்.

அது அவரால் விண்வெளியில் செலுத்தப்பட்ட தெற்காசியா தொடர்பாடல் செயற்கைக் கோளாகும். அதன் வசதிகளை அனுபவிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெற்காசிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தானைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வந்துள்ளன.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே இவ்வாறு முன்வந்த நாடுகளாகும்.

Comments
Loading...