Designed by Iniyas LTD
மோட்டார் சைக்கில் மின்கம்பத்தில் மோதி இளைஞன் பலி!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 24வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
ஆரையம்பதி பக்கமாக இருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது.இதனையெடுத்து விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் வைக்கிள் ஓட்டுனரான 24 வயது இளைஞன் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அஹமட் றுஸ்னி எனும் 15 சிறுவன் கை உடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தில் மரணமடைந்த 24 வயது இளைஞன் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் மத்ராஸாவின் ஆசிரியர் மொளவி ஒஸாமா என தெரவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.