தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழின் பல இடங்களில் வாள்வெட்டு – திட்டமிட்ட செயலா?…

யாழில் பல இடங்களிலும் நேற்றிரவு   வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர்  வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளண்டுள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற  எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...